வரியை தவிர்க்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்க- நிர்மலா சீதாராமன்

  0
  5
  நிர்மலா சீதாராமன்

  வரி விதிப்பை தவிர்க்க முயற்சி செய்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுங்க என வரி துறை அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

  டெல்லியில்  நேற்று நடைபெற்ற வருமான வரி தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது: வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடியிலிருந்து பிரதமர் மோடி விரும்பும் அளவுக்கு உயர்த்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறினார். மத்திய பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நேரடி வரிகள் வசூல் இலக்கு ரூ.13.35 கோடி எட்டக்கூடியதுதான். கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வசூலை வரித்துறை இருமடங்கு அதிகரித்துள்ளது.

  வருமான வரித்துறை

  அமைப்பிடம் விளையாடுபவர்களை  நீங்கள் (வரித்துறை) தொடர்ந்து கண்காணியுங்கள். எங்கு தப்பு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க உங்கள் கைகளில் டேட்டா சுரங்கம், பெரிய டேட்டா பயன்பாடு உள்பட அனைத்து கருவிகளும் உள்ளன. வரி தவிர்க்க முயற்சி செய்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள்  எடுங்க. நீங்க உண்மையில் உறுதியான நடவடிக்கை எடுத்தால் நான் முழுமையாக நான் உங்களோடு இருப்பேன். 

  வரி ஏய்ப்பு

  வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க வரித்துறையின் (வருமான வரி, அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம்) 3 விசாரணை அமைப்புகளும் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதேசமயம் நேர்மையாக வரி செலுத்த நினைப்பவர்களுக்கு வரி துறை நல்ல உதவியாளர்களாக இருக்க வேண்டும்.

  வரி செலுத்துபவர்கள் வரி செலுத்துவதை தண்டனையாக கருதாமல், தேசத்தை கட்டமைப்பதில் உங்கள் பங்களிப்பாக நினையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.