வரலாறு காணாத தங்க விலை உயர்வு…சவரன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது!

  0
  3
  இன்றைய தங்கம் விலை

  தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.31 ஆயிரத்திற்கு மேலாகவே நீட்டித்து வந்தது.

  இந்த ஆண்டு தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.31 ஆயிரத்திற்கு மேலாகவே நீட்டித்து வந்தது.

   

  rn

  இந்நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 34 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 12 ரூபாயாகவும், சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து  96 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

  rtn

   மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.30க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது இதுவே முதன்முறையாகும். இதனால் சாமானிய மக்கள் கவலையில் திளைத்துள்ளனர்.