வரதட்சணை பாக்கிக்காக மாமியாரின் மூக்கை கடித்த மருமகன், காதை வெட்டிய சம்பந்தி!

  0
  2
  Dowry is inhumane

  ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மணமகன் ஆஷ்ஃபிக் கோவத்தில் என்ன செய்வதென தெரியாமல் மாமியாரின் மூக்கை கடித்திருக்கிறார். என்ன இருந்தாலும் அவங்க உங்க மாமியார், அப்படி எல்லாம் செய்யக்கூடாது என அந்தாளின் அப்பன் அட்வைஸ் பண்ணுவான் என்று பார்த்தால், அந்தாளோ அரிவாளை தூக்கிவந்து சம்பந்தியம்மாவின் காதை துண்டித்துவிட்டான்.

  உத்தர பிரதேசம், பேரெலி பகுதியில் ஏற்பட்ட வரதட்சணை சண்டையில் பெண்ணின் மூக்கு கடிபட்டது, காது அறுக்கப்பட்டது என்பதை தலைப்புச் செய்தியாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் டீட்டெய்லாக படிக்க ஆரம்பித்தால், என்ன கருமம்டா இதுன்னுதான் நினைக்கத்தோணும். ஏன்னா, கடிபட்டது மாமியாரின் மூக்கு, கடித்தது மருமகன். இது பத்தாதுன்னு சம்பந்தியம்மா காதை வெட்டி எறிந்திருக்கிறார் மாப்பிள்ளையின் அப்பா. காந்தா ரஹ்மான் என்பவரின் மகள் சந்த்பீ என்பவருக்கும், சீர் செணத்தியோடு பத்து லட்சம் ரொக்கம் என்ற அக்ரீமெண்ட்டின்படி, முகம்மது ஆஷ்ஃபிக் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணமாகியிருக்கிறது. திருமணம் முடிந்த ஓர் வருடத்தில் புதுமண தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

  Dowry is a national shame

  பேத்தியை ஆசையோடு பார்க்க வந்திருக்கிறார்கள் பெண்ணின் பெற்றோர். அப்போது மணமகன் வீட்டார் அவர்களிடம், பெண் குழந்தை பிறந்திருப்பதால் கூடுதலாக 5 லட்சம் வரதட்சணை கேட்டிருக்கிறார்கள். பெண்ணின் பெற்றோருக்கு செம ஷாக். இருக்காதா பின்னே? குழந்தை பெற்றது நீங்கள், ஆனால் பனிஷ்மெண்ட் எங்களுக்கா? என கேட்க, விவாதம் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மணமகன் ஆஷ்ஃபிக் கோவத்தில் என்ன செய்வதென தெரியாமல் மாமியாரின் மூக்கை கடித்திருக்கிறார். என்ன இருந்தாலும் அவங்க உங்க மாமியார், அப்படி எல்லாம் செய்யக்கூடாது என அந்தாளின் அப்பன் அட்வைஸ் பண்ணுவான் என்று பார்த்தால், அந்தாளோ அரிவாளை தூக்கிவந்து சம்பந்தியம்மாவின் காதை துண்டித்துவிட்டான். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயர்சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட குல்ஷன். மருமகனும் சம்பந்தியும் தலைமறைவாகி முன் ஜாமீனுக்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.