‘வரதட்சணை கொடு, இல்லையென்றால் உயிரை விடு’-கர்ப்பிணி மனைவியை கை நரம்பை துண்டித்து …. 

  0
  1
  andhra

  இப்போது சுஸ்மிதா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தாய் இல்லாத சுஸ்மிதாவை அவரது உறவுக்காரரான பிரதாப்புக்கு 3 லட்சம் டவுரி கொடுத்து கல்யாணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் பிரதாப் தன் மனைவியிடம் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அல்லகட்டா பகுதியில் பிரதாப் என்ற கணவனும், சுஸ்மிதா என்ற மனைவியும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம்  செய்து கொண்டு வாழ்ந்தனர். இப்போது சுஸ்மிதா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தாய் இல்லாத சுஸ்மிதாவை அவரது உறவுக்காரரான பிரதாப்புக்கு 3 லட்சம் டவுரி கொடுத்து கல்யாணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் பிரதாப் தன் மனைவியிடம் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

  cc

  அதனால் சென்ற சனிக்கிழமையன்று மனைவியை கூட்டிக்கொண்டு ஒரு ஆற்றோர பகுதிக்கு சென்றார். அங்கு அவரின் கை நரம்புகளையும், கழுத்து நரம்புகளையும்  வெட்டி  கொலை செய்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டு வந்துள்ளார். மறுநாள் சுஸ்மிதாவின் உறவினர்கள் சுஸ்மிதா பற்றி கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்கள் போலீசில் புகார் தந்தனர். போலீசார் விசாரித்ததில் அவர் சுஸ்மிதாவை கொலை செய்ததை  ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது அவர் பேரிலும் அவர் குடும்பத்தினர் பேரிலும் போலீசார் வழக்கு ப்பதிவு செய்துள்ளார்கள். ‘வரதட்சணை கொடு, இல்லையென்றால் உயிரை விடு’-கர்ப்பிணி மனைவியை கை நரம்பை துண்டித்து.