வரதட்சணை கேட்டு கொடுமை… மும்பையில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தற்கொலை!

  0
  1
  Manisa suicide

  மும்பையில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆன ஒரு சில வாரங்களிலேயே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மும்பை அருகே உள்ள பாந்துப் பகுதியைச் சேர்ந்தவர் மணிஷா ஷெல்கே. இவர் மும்பையில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் சாய் பிரசாத் வசந்த் ஷெல்கே என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பேசியபடி வரதட்சணை வழங்கியுள்ளனர்.

  மும்பையில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆன ஒரு சில வாரங்களிலேயே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்த இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  மும்பை அருகே உள்ள பாந்துப் பகுதியைச் சேர்ந்தவர் மணிஷா ஷெல்கே. இவர் மும்பையில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் சாய் பிரசாத் வசந்த் ஷெல்கே என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பேசியபடி வரதட்சணை வழங்கியுள்ளனர். ஆனால், இது போதாது என்று திருமணமான முதல் நாளிலிருந்தே மணிஷாவை கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

  தினமும் தான் சந்திக்கும் கொடுமைகள் பற்றி மணிஷா தன்னுடைய பெற்றோருக்குக் கூறி வந்துள்ளார். மாப்பிள்ளை வீட்டில் கேட்பதை எல்லாம் கொடுக்க தயாராக இருந்தும் கொடுமைப்படுத்துவது மட்டும் நிற்கவில்லை. இந்தநிலையில், கொடுமை தாங்க முடியாமல் தன்னை அழைத்துச் செல்லும்படி மணிஷா தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

  mumbai

  இதைத் தொடர்ந்து மணிஷாவின் சகோதரர் மயூர் சென்று மணிஷாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார். திருமணம் ஆன ஒரு சில வாரங்களிலேயே தங்கள் மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று பெற்றோர் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர்.
  இந்த நிலையில் தன்னுடைய அறைக்குச் சென்ற மணிஷா வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மணிஷா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உடனே அவரை கீழே இறக்கி, மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
  இதைத் தொடர்ந்து மணிஷா தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, மணிஷாவின் அறையிலிருந்து கடிதம் ஒன்றைக் கைப்பற்றினர். அதில், தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் கணவன், அவனது அம்மா, அப்பாதான் என்று விரிவாக கூறியிருந்தார். இதன் அடிப்படையில், சாய் பிரசாத் (30), அவனது அப்பா வசந்த் ஷெல்கே (61), அம்மா ஹீரா ஷெல்கே (55) ஆகியோரை கைது செய்தனர்.
  இது குறித்து மணிஷாவின் சகோதரர் மயூர் கூறுகையில், “வரதட்சணை கூடுதலாகக் கேட்டு கொடுமை செய்வதாக மணிஷா கூறிவந்தார். நிறைய முறை போனில் அழுவார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறினோம். வீட்டுக்கு அழைத்துவந்தால் அமைதியடைவார், பிரச்னையை பேசி தீர்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் இப்படி ஒரு விபரீதமான முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை” என்றார்.