வரணும்.. பழைய தலைவராக ராகுல் காந்தி வரணும்…. காங்கிரஸ் மூத்த தலைவர் வலியுறுத்தல்

  0
  1
  சல்மான் குர்ஷித்

  காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வர வேண்டும் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.

  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை காங்கிரஸ் மேலிடம் ஆரம்பித்தது. இருப்பினும் ஒரு மனதாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாததால், இடைக்கால தலைவராக பொறுப்பேற்கும்படி கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று கொண்டார்.

  சோனியா காந்தி

  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் பேட்டி ஒன்றில், நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து ஆய்வு செய்ய நாங்கள் ஒன்று கூடவில்லை. ராகுல் காந்தி தோல்வியால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தது எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. ராகுல் வெளியேறியதால் கட்சியின் தலைமையில் வெற்றிடம் நிலவுகிறது என கூறியிருந்தார்.

  காங்கிரஸ்

  சல்மான் குர்ஷித்தின் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த கட்சியின் செய்தி தொடா்ர்பாளர் பவண் கேரா இது குறித்து கூறுகையில்,  இது போன்ற கருத்துக்களை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பா.ஜ. அரசின் தவறுகளை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

  ராகுல் காந்தி

  இந்நிலையில் சல்மான் குர்ஷித் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரின் கருத்து பதிலடி கொடுக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், எங்களது செய்தி தொடர்பாளர்  பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான நமது கடமையை சுட்டிகாட்டும்போது, நம்முடைய வித்தியாசமான உலக கண்ணோட்டத்தையும், மனதின் வெளிபாட்டை எந்தவித பயமும் இன்றி வெளிப்படுத்த முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகும என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். ராகுல் காந்தி எங்கள் மாபெரும் கட்சியின் மாபெரும் தலைவராக திரும்ப வர வேண்டும் என பதிவு செய்துள்ளார்.