வயிற்று வலியால் துடித்த சிறுமி…ஸ்கேன் ரிப்போர்ட்டில் வெளியான அதிர்ச்சி!

  0
  9
   காந்த குண்டு

  அதன்பிறகு ஏதேனும் விபரீதம் நடந்தால் தான் அவர்களுக்கு தாம் செய்தது தவறு என்பதே புரிகிறது. 

  குழந்தைகளை தனியாக விளையாடவிடும் பெற்றோர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கவே மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு ஏதேனும் விபரீதம் நடந்தால் தான் அவர்களுக்கு தாம் செய்தது தவறு என்பதே புரிகிறது. 

  ttn

  அந்த   வகையில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ரெபேக்கா என்பவற்றின்  7 வயது மகள் ஒலிவியா. எப்போதும் தனது அறையில் விளையாடிக்கொண்டிருக்கும்  ஒலிவியா சமீபத்தில் திடீரென்று கத்தியுள்ளார். குழந்தை வயிற்று வலியால்  அவதிப்படுவதைப் பார்த்த அவரின் அம்மா ரெபேக்கா, உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு  ஒலிவியாவின் வயிற்றை  ஸ்கேன்  செய்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

  ttn

  காரணம் அவரின் வயிற்றுக்குள்  சிறு சிறு உருண்டை போன்ற பந்துகள் செரிமான குடலை அடைத்தபடி  இருந்துள்ளது. 

  ttn

  இதுகுறித்து ஒலிவியாவிடம் கேட்டபோது,  விளையாடி கொண்டிருக்கும் போது  காந்த  குண்டுகளை விழுங்கி விட்டதாக அவர் கூறியுள்ளனர். இதையடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காந்த  குண்டுகளை  ஒலிவியாவின் செரிமான குடலிலிருந்து மருத்துவர்கள் அகற்றினர்.

  ttn

   காந்த குண்டுகளை ஆஸ்திரேலிய கடைகளில் தடைசெய்யப்பட்ட  பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.