வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய் குழம்பு!

  0
  1
  சுண்டைக்காய் குழம்பு

  தேவையான பொருட்கள்
  சுண்டைக்காய் வத்தல்    -ஒரு மேஜைக் கரண்டி
  புளி                    -சிறு எலுமிச்சை அளவு
  கடுகு        -1/2டீஸ்பூன்
  உ.பருப்பு        -1/2டீஸ்பூன்
  சீரகம்        -1டீஸ்பூன்
  மிளகு        -1டீஸ்பூன்
  பெருங்காயம்    -சிறு துண்டு
  எண்ணெய்    -2டேபிள்ஸ்பூன்

  தேவையான பொருட்கள்
  சுண்டைக்காய் வத்தல்    -ஒரு மேஜைக் கரண்டி
  புளி                    -சிறு எலுமிச்சை அளவு
  கடுகு        -1/2டீஸ்பூன்
  உ.பருப்பு        -1/2டீஸ்பூன்
  சீரகம்        -1டீஸ்பூன்
  மிளகு        -1டீஸ்பூன்
  பெருங்காயம்    -சிறு துண்டு
  எண்ணெய்    -2டேபிள்ஸ்பூன்
  கறிவேப்பிலை-10 இலைகள்
  உப்பு        -தேவையான அளவு

  sundakkai

  செய்முறை
  மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்ய வேண்டும். மீதி எண்ணெயில் சுண்டைக்காய் வத்தலை சிவக்க வறுத்து எண்ணெயோடு அப்படியே வைக்க வேண்டும். புளிபேஸ்ட்டையும், உப்பையும் 2கப் தண்ணீரில் கலந்து 2 கொதி வரும் வரையில் கொதிக்க வைக்க வேண்டும். பின் வறுத்த பொடியை போட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கடைசியில் வறுத்த சுண்டைக்காய் வற்றலையும், எண்ணெயுடன் கறிவேப்பிலையும் போட்டு சிறிது நேரம் கொதித்த பின்பு கடுகு தாளித்து இறக்க வேண்டும். கசப்புத் தெரியாமல் இருப்பதற்காக வெல்லம் வேண்டும் என்பவர்கள் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.