வயசாகிவிட்டது, இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்தேன் – ரஜினிகாந்த்

  12
  ரஜினி

  தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “லண்டனில் ஒரு பூங்காவிற்கு என் பெயர் வைக்க வேண்டும் என சுபாஷ்கரன் சொன்னார். நான் வேண்டாம் என்றேன். ரமணா பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தள்ளிப்போய்விட்டது.

  வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன். தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல். நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தர்பார் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். நயன்தாரா சந்திரமுகியை காட்டிலும், கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.

  ரஜினி

  இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது. அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது. தமிழக அரசு மீது பல விமர்சனங்களை வைத்திருந்தாலும் இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி. நல்ல நடிகனாக இருந்தால் மட்டுமே வைக்க வேண்டும் என பாலச்சந்தர் வைத்திருந்த ரஜினி எனும் பெயரை எனக்கு வைத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.. நெறைய நெகட்டிவிட்டி பரவுது. அரசியல், ஊடகம் என எல்லாவற்றிலும் அப்படித்தான் இருக்கிறது. அதனால் அன்பை பரப்புங்கள். முடிந்த வரை ஏழை எளியோருக்கு உதவி செய்யுங்கள். என் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். பிறந்தநாளான்று வழக்கம்போல் நான் ஊரில் இருக்க மாட்டேன்” எனக் கூறினார்.