வன்கொடுமை க‌ர்ப்பம் – கருக்கலைப்புக்கு புதிய நடைமுறை – ஐகோர்ட்

  0
  2
  Chennai High Court

  மத்திய அரசு சட்டப்படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே டாக்டர்கள் குழுவின் ஆலோசனைகளை பெறவேண்டும். இந்த ஐகோர்ட்டையும் நாட வேண்டும். ஆனால் 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க பாதிக்கப்பட்ட பெண்கள், டாக்டர்கள் குழுவை அணுகி ஒப்புதல் பெறவேண்டிய அவசியமில்லை.

  சென்னை உயர்நீதிமன்றத்தில், பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு கருக்கலைப்புக்கு அனுமதி வேண்டி  மனு ஒன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்மூலம் பதியப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் வாதாடும்போது, ‘20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க, பாதிக்கப்படும் பெண்கள் ஐகோர்ட்டை அணுகவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது தேவையற்ற கால தாமதத்தையும் மன உளைச்சலையும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுத்தும்” என வாதிட்டார்.

  Rape victim

  இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் “வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்  8 முதல் 10 வாரம் வரையிலான கருவை கலைக்க கோரியுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்பெண்ணுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழு தான் கருவை கலைக்க முடிவு செய்ய முடியும் எனக்கூறி கடிதம் கொடுத்துள்ளனர். மத்திய அரசு சட்டப்படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே டாக்டர்கள் குழுவின் ஆலோசனைகளை பெறவேண்டும். இந்த ஐகோர்ட்டையும் நாட வேண்டும். ஆனால் 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க பாதிக்கப்பட்ட பெண்கள், டாக்டர்கள் குழுவை அணுகி ஒப்புதல் பெறவேண்டிய அவசியமில்லை. அதேபோல நீதிமன்றத்தையும் நாட வேண்டியதில்லை” என்று தீர்ப்பளித்துள்ளார்.