வனிதாவை இமிடேட் செய்த கவின்: டிவிட்டரில் வனிதா பதில்!

  0
  10
  கவின்

  பிக் பாஸ் போட்டியாளர் கவின், வனிதா போல நடித்து காட்டியதற்கு வனிதா டிவிட்டரில் பதிலளித்துள்ளார். 

  பிக் பாஸ் போட்டியாளர் கவின், வனிதா போல நடித்து காட்டியதற்கு வனிதா டிவிட்டரில் பதிலளித்துள்ளார். 

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3  மிகவும் சிறப்பாக இருந்ததாகப் பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் காதல், சண்டை, நட்பு என பார்வையாளர்களைக் கவர்ந்தது. 

  bb

  இந்த நிகழ்ச்சி முடிந்ததாலும் போட்டியாளர்கள் சாகப்போட்டியாளர்களின் வீடுகளுக்கு செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என ஜாலியாக உள்ளனர்.

  bb

  அந்த வகையில் வீ ஆர்  தி பாய்ஸ் கேங்கான தர்ஷன், கவின், சாண்டி, முகேன் உள்ளிட்டோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அதில், பெண் போட்டியாளர்களைப் போல ஆண்கள் பேச வேண்டும். அப்படி வனிதா போல களமிறங்கிய கவின், அங்கிருந்தவர்களின்  கேள்விகளுக்கு வனிதா போலவே பேசி சிரிப்பூட்டினார். பின்னர் அக்கா மன்னிச்சுக்கோங்க… நேரில் வந்து பேசுறேன்’ என்று ஜாலியாக முடித்தார்.

  இந்நிலையில் இதுகுறித்து நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கவின் தம்பி, டேய், கொண்டாட்டம்ல பார்த்துக்கிறேன் உன்ன’ என்று பதிவிட்டுள்ளார்.