வனிதாவைப் பங்கமாகக் கலாய்த்துத் தள்ளிய சாண்டி 

  0
  7
   சாண்டி  

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். 

  இந்த நிலையில் நேற்று செம ட்விஸ்ட்டாக ஏற்கனவே வெளியே சென்ற அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். தற்போது இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் ஆண்கள் அணி சிகப்பு கேட் வாசலில் அமர்ந்து கொண்டு கலாய்க்கின்றனர். 

  இந்த முறை அதில் சிக்கிய நபர் வனிதா தான். சாண்டி அங்கு அமர்ந்துகொண்டு உள்ளே வனிதா பேசுவதற்கு டப்பிங் கொடுப்பது போல் பேசுகிறார். அப்போது பேசியதாவது, ‘பண்ணட்டும்.. பண்ணட்டும்..எவளோ பண்ணாலும் நான் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று கப் கொண்டு செல்ல போகிறேன். அவங்க மூக்கை உடைக்கத் தான் நான் திரும்பி வந்தேன். அவன் யாரு என்ன பத்தி பேசுறதுக்கு’ என்று நகைச்சுவையாகக் கலாய்ப்பது போன்று புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் கலவரங்கள் நிறைந்த ஃபன் எபிசோடாக இன்றைய நாள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.