வனிதாவுடன் மல்லுக்கட்டும் சாண்டியின் முன்னாள் மனைவி!

  0
  5
  வனிதா - காஜல்

  சேரனுக்கு தனது இதயத்தை தருவதாக உருக்கமாகச் சொல்லிவிட்டு வனிதா இன்று அவரை நாமினேஷன் செய்றீங்களே என்று நடிகை காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

  சேரனுக்கு தனது இதயத்தை தருவதாக உருக்கமாகச் சொல்லிவிட்டு வனிதா இன்று அவரை நாமினேஷன் செய்றீங்களே என்று நடிகை காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

  பிக்பாஸ் சீசன் 3 சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பாச மழையில் திளைத்து போயிருந்த நிகழ்ச்சியில் நேற்று அடித்து கொள்ளாத குறையாக தகராறு ஏற்பட்டது.  அமிராமி வாட்டர் பாட்டிலை முகேன் ராவ்வுடன் எனக்கு பிறந்த குழந்தை என்று சொல்ல, அதை கேட்டு தமிழ் பொண்ணு நான். எங்க வீட்ல இதையெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க என்று கூற சண்டை வெடித்தது. இதுஒருபுறமிருக்க  #tamilponnu ஹேஷ்டாக்கும்  ட்ரெண்டானது தான் உச்சகட்ட கொடுமை. 

   

  இந்நிலையில் இதுகுறித்து சாண்டியின்  முன்னாள் மனைவியும் நடிகையுமான நடிகை காஜல் கேள்வி  எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சாம்பியனுமான ரித்விகா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியபோது யாரும் கோபப்படவில்லை, மாறாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் அதையே மதுமிதா சொன்னபோது கோபம் ஏன்? என்று பதிவிட்டுள்ளார்.

  மேலும் தனது மற்றொரு பதிவில், ‘நேற்று இரவு சேரனுக்கு  இதயத்தை தருவதாக உருக்கமாக சொல்லிவிட்டு இன்று அவரை நாமினேஷன் செய்றீங்களே’ என்று வனிதா குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.