வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  அதிர்ச்சி தகவல் !

  40
  மாதிரி படம்

  நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

  நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

  chicken

  உணவுப் பொருளில் செய்யப்படும் கலப்படம் தரத்தை குறைப்பதுடன் நுகர்வோருக்கு உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்களில் தேவையற்ற வண்ணம் சேர்ப்பதாலும்,  சுவைக்குரிய பொருட்களை சேர்ப்பதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கலப்படம் உள்ள சமையல் எண்ணெயால் வாயுத்தொல்லை, காமாலை,  ஈரல் நோய்கள் ஏற்படுகின்றன.

  கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களால் கண்பார்வை மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  குளிர்பானங்களில் அனுமதிக்கப்படாத சாயங்கள் சேர்க்கப்படுவதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்பது சிகரெட்டுகளை புகைத்தால் எவ்வளவு நிகோட்டின் உடலில் சேருமோ, அதே அளவு நிகோட்டின் ஒவ்வொரு தடவையும் பேஸ்ட்டில் பல் துலக்கும்போது உடலில் சேர்கிறது. 

  cauliflower

  சமீப காலமாக சில்லிசிக்கன், காலிபிளவர் உள்ளிட்டவைகளுக்கு அதிகளவில் கேசரி பவுடர் என்று அழைக்கப்படும் ஜிலேபி பவுடர் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. இவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கலக்கப்படுவதால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குடல் புற்றுநோய் வருகிறது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

  baby

  எனவே கம்பு, சோளம்,கோதுமை,கேழ்வரகு,சாமை, திணை, பழைய சோறு, சின்ன வெங்காயம் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுப்பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியும், எவ்வித தீங்கும் ஏற்படுத்தாத வகையில் இருக்கும். 
  பிராய்லர் கோழி குறைந்த காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைய ரசாயன ஊசி செலுத்தப்படுகிறது. இதன் மூலம் சில்லிசிக்கன், சிக்கன் 65 என பல வகையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இதில் வாசனை, ருசிக்காக செயற்கை வண்ணம், அஜினோமோட்டோ அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

  food

  இதை சாப்பிடும் பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்பெய்துவிடுகின்றனர். மேலும் செயற்கை வண்ணம் குழந்தைகளின் குடல் பகுதியிலேயே தங்கிவிடுவதால் குடல் புற்றுநோயாக மாறுகிறது. 100 குழந்தைகளில் 20 குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் தாக்கம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.