வடிவேலுவை ஓரம்கட்டி சூப்பர் ஹிட் படத்தில் இணைந்த யோகிபாபு? 

  0
  4
  astro-simmam5656-20-1513764474

  சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் பணிகள் மீண்டும் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், வடிவேலு நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த இப்படத்தை இயக்குநர்  சிம்பு தேவன் இயக்கியிருந்தார். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் இயக்கிவந்தார். 

  ஆனால் வடிவேலுக்குத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிம்பு தேவனுடன் பிரச்சனை ஏற்பட்டதால் படத்தை கைவிட்டனர். ஆனால் இந்த படத்தை மீண்டும் துவங்குமாறு சிம்பு தேவனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். 

  இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த படத்தை மீண்டும் சிம்பு தேவன் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் வடிவேலுக்குப் பதிலாக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை நடிக்கவைக்கப் பேச்சு வாரத்தை நடைபெற்று வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான தர்ம பிரபு படத்தை பார்த்த பின்பு இயக்குநருக்கு, யோகி பாபுவை வைத்து இந்த படத்தை இயக்கிவிடாமல் என்ற எண்ணம் வந்துள்ளது போல? மேலும் வடிவேலு நடிப்பிற்கு ஈடாக யோகி பாபுவும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டுவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.