வடிவேலுவை உதவிக்கு அழைத்த போலீசார்.. ராயல்டி கேட்டு மிரள வைப்பாரா?

  0
  6
  வடிவேலு

  குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கசப்பான மருந்து மாத்திரைகளை தேன் தடவி கொடுப்பதைப் போல, போலீசார் விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிக்க முற்பட்டிருக்கிறார்கள். இந்த வாட்ஸ் -அப் காலத்தில், எல்லார் செல்போன்களிலும் மீம்ஸ்கள் மீல்ஸ் மாதிரி குவிந்து கிடப்பதைப் புரிந்துக் கொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வடிவேலுவை வைத்து ஹெல்மெட் மீம்ஸ் செய்து பரப்பியிருக்கிறார்கள்.

  vadivel

  ஏற்கெனவே கல்யாணம், கச்சேரி என்பாட்டு எப்போதும் ஒலிக்கும் என்று இளையராஜா, தன் பாடல்களுக்கான ராயல்டி கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். ப்ரெண்ட்ஸ் படத்தின் நேசமணி கேரெக்டர் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உலகம் முழுக்க ஆளாளுக்கு அப்பன், ஆத்தாவின் உடல் நிலையை எல்லாம் அந்தரத்தில் பறக்க விட்டு விட்டு,‘ப்ரே ஃபார் நேசமணி’ என்று கதறியழுது ட்விட்டரில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, என்னை வைத்து நிறைய மீம்ஸ்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ராயல்டி கேட்கலாமா என்று யோசித்து வருகிறேன் எனக் கூறியிருந்தார் வடிவேலு. 

  meme

  சோளக்கொல்லை பொம்மை மாதிரி வடிவேலுவை வெச்சு ஆளாளுக்கு விளையாடி வந்தாலும், நல்ல காரியத்துக்குத் தானேன்னு மனுஷன் சந்தோஷப்படத் தான் செய்வார் என்கிற நம்பிக்கையில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது வடிவேலுவின் ஹெல்மெட் பிரச்சாரம். இந்த வடிவேலு மீம்ஸ் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.