வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்! இப்ப டாக்டராகிவிட்டார்… எடப்பாடியை தொடர்ந்து கமல்ஹாசனுக்கும் டாக்டர் பட்டம்! 

  0
  1
  கமல்ஹாசன்

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலை. சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது.

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலை. சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது.

  நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இதுவரை தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

  கமல்ஹாசன்

  இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த செண்டியூரின் பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. புவனேஸ்வரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில்  நாளை நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கவுள்ளார். மேலும், பரமக்குடி திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம தரங்’ திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது.

   

   

  அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடதக்கது.