வசதியான சின்னப்பையன் உதயநிதி… கமல் எடுத்த அதிரடி முடிவு..!

  0
  4
  ரஜினிகாந்த்

  உதயநிதியின் ஆசையை நிராகரித்து போராட்டத்தில் பங்கேற்கவில்லை எபத் தெரிவித்து விட்டார் கமல். காரணம் வெளிநாடு செல்கிறாராம்.

  குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திமுக கூட்டணி கட்சிகளுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து இருந்தது. கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மையத்திற்கு அழைப்பு கொடுக்கவில்லை.

  திமுக அழைத்தால் பேரணியில் பங்கேற்போம் என்று கமலஹாசன் கூறியிருந்தார். அதன் பிறகு அழைப்பு கொடுக்கலாமா என்று திமுக தலைமை யோசித்து இருக்கிறது திமுகவின் சீனியர்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு கொடுப்பதை விரும்பவில்லை. நடிகர் கமலும் அழைப்பு கொடுத்தால்தான் பண்ணிப்பேன் என்று கூறிய பிறகு கண்டிப்பாக அழைப்புக் கொடுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினாராம்.Rajini

  அதன்பிறகுதான் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் உள்ளிட்டோர் கமலை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். கமல் காலில் லேசான அறுவை சிகிச்சை செய்திருப்பதால் பங்கேற்க முடியாது என்றார். பிறகு பேரணியில் கமல் பங்கேற்கிறார் என்கிறார்கள். திமுகவில் கட்சி நலன் கருதி சில முக்கிய முடிவுகளும் சிலருக்கு பதிலடி கொடுத்து திமுகவினரை உற்சாகப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறார் உதயநிதி. அதற்கும் காரணம் இருக்கிறது. கமலை வைத்து ரஜினியில் மூக்குடைக்கலாம் என்பதே உதயநிதியின் திட்டம்.

   udhayanidhi

  ஆனால் உதயநிதியின் ஆசையை நிராகரித்து போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்து விட்டார் கமல். காரணம் வெளிநாடு செல்கிறாராம்.  உதயநிதி ரஜினியை வசதியான பெரியவர் என ட்விட் போட்டதுதான் போராட்டத்தில் பங்கேற்காததற்கு காரணம் என்கிறார்கள். இப்போதைக்கு கமலுக்கு திமுகவை விட ரஜினி முக்கியம்.

  திமுகவுடன் நெருங்கிப்போனால் கூட்டணிக்கட்சி தலைவர். ரஜினியுடன் நெருங்கிப்போனால் முதல்வர் வேட்பாளர். இதை உணர்ந்து கொள்ளாமல் சிறுவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு பின் செல்வாரா கமல்..?