வங்கதேச புலிகளை பொட்டலம் கட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்திய அணி!

  0
  7
  India

  முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா.

  முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா.

  இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது.

  match

  அதன்பின் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தவுடன், டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இவர் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

  match

  இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி வங்கதேச அணியை விட 343 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

  இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடம் முன்பாக திடீரென இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து, 2வது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் தலா 6 ரன்கள் எடுத்து வெளியேறினர். 

  match

  அடுத்து வந்த கேப்டன் மொமினுள் மற்றும் மிதுன் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, உணவு இடைவேளைக்கு முன்பாக 4 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் இருந்தது வங்கதேச அணி. மஹ்மதுல்லாவும் நீடித்து இருக்கவில்லை. 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மூத்த வீரர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை ஓரளவுக்கு சமாளித்தனர். 

  match

  நன்கு ஆடிவந்த லிட்டன் தாஸ் துரதிஷ்டவசமாக 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இளம் வீரர் மெய்தி ஹாசன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்று நம்பிக்கை அளித்த ரஹீம் 64 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. 

  இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய சமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

  இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.