லொஸ்லியா இதயங்களை வென்றுவிட்டார்: முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் புகழாரம்! 

  0
  4
  லொஸ்லியா

  லொஸ்லியா ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார் என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

  சென்னை: லொஸ்லியா ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார் என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 15 போட்டியாளர் முதல் நாளில் கலந்து கொண்ட நிலையில் மறுநாள் மற்றொரு போட்டியாளராக மீரா மிதுன் கலந்து கொண்டார்.

  அதில் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா தனது எதார்த்தமான குணத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே லொஸ்லியாவிற்கு பல ஆர்மி உருவாக்கினர். 

  losliya and hk

  இந்நிலையில்,கடந்த புதன்கிழமையன்று லொஸ்லியா, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பாடலை கேமரா முன்பு வந்து பாடினார். அதை பார்த்த ஹரிஷ் கல்யாண் அவர் பாடியதை ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். 

  அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹரிஷ் கல்யாண், ‘லொஸ்லியா இதயங்களை வென்றுவிட்டர். பிக் பாஸ் வீட்டில் கண்ணம்மா பாடல் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.