லாஸ்லியாவுக்கு எதிராகத் திரும்பிய பெண்கள் அணி!

  10
  பிக் பாஸ்

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். 

  இந்த வாரம் முகின், கவின், லாஸ்லியா, சேரன் மற்றும் ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த சீசன்னில் இருந்து வெளியேறிய அபிராமி, சாக்ஷி அகர்வால் மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் நுழைந்துள்ளனர். 

  இந்த நிலையில் இவர்களின் வருகை எதாவது ஒரு கலவரத்தை உண்டாகும் என்று பேசப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் பெண்கள் அணி இணைந்து லாஸ்லியவை டார்கெட் செய்வது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.