லாஸ்லியாவின் டான்ஸ்; கவினின் முத்தம்…அதகளப்படுத்தும் பிக் பாஸ் கொண்டாட்ட வீடியோ!

  0
  7
  பிக் பாஸ் 3 கொண்டாட்டம்

  இதையடுத்து பிக் பாஸ் போட்டி முடிந்து அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் படுபிஸியாக உள்ளனர். 

  பிக் பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இதில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.  இதையடுத்து பிக் பாஸ் போட்டி முடிந்து அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் படுபிஸியாக உள்ளனர். 

  bb

  சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளனர். மேலும் லாஸ்லியாவிடம் அவரது அம்மா மன்னிப்பு கேட்டது, கவின் தனது காதல் குறித்து பேசியது, வனிதா மகள் அழுதது உள்ளிட்ட பல சுவாரஸ்ய  சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

   

  இந்நிலையில்  பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும்  நவம்பர் 3 ஆம் தேதி  ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான புரொமோ  வீடியோ வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் நிகழ்ச்சியை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து கிடக்கின்றனர்.