லாபம் மட்டுமே ரூ.4,047 கோடி…… அசத்தும் ஐ.டி.சி.

  0
  9
  ஐ.டி.சி. தயாரிப்புகள்

  ஐ.டி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,047.87 கோடியாக ஈட்டியுள்ளது.

  நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஐ.டி.சி., முதலில் சிகரெட் வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. அதன் பிறகு தனது கவனத்தை பிஸ்கட், கோதுமைமாவு உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த தொடங்கியது. இதனால் ஐ.டி.சி. நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

  ஐ.டி.சி.

  இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,047.87 கோடியாக உயர்ந்துள்ளது. இது  சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 29.03 சதவீதம் அதிகமாகும். 2018 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.3,136.95 கோடியாக இருந்தது.

  ஐ.டி.சி. தயாரிப்புகள்

  ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர வருவாய் 2019 டிசம்பர் காலாண்டில் 5.71 சதவீதம் அதிகரித்து ரூ.13,220.30 கோடியாக உயர்ந்தது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த செலவினம் 5.25 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.8,779.14 கோடியாக அதிகரித்துள்ளது.