லாபம் தரும் ஐ.ஆர்.சி.டி.சி. ! தனியாருக்கு தாரை வார்க்கிறதா மத்திய அரசு?

  0
  2
  ஐஆர்சிடிசி

  2.5 கோடி பரிவர்த்தனைகளுடன் லாபகரமாக இயங்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  2.5 கோடி பரிவர்த்தனைகளுடன் லாபகரமாக இயங்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தனது 12.6% பங்கு களை, இந்திய பங்குச் சந்தைகளில் விற்பனை செய்துள்ளது.இந்திய ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.220.60 கோடி, 201819 நிதி ஆண்டில்  ரூ.272. 60 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2018- இல் 1,470.46 கோடி இருந்த வருவாய், 2019-இல் 1,867.88 கோடி ரூபாய் என இருமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.

  irctc

  இந்நிலையில் லாபம் ஈட்டும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தன்னுடைய 100% பங்குகளில், 12.6% சதவிகித பங்குகளை, ஒரு பங்கு ரூ. 315 முதல் ரூ. 320 என்ற விலையில், தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்து, செப்டம்பர் 30-ஆம் தேதி பங்குகளை வெளியிட்டது.இந்த 2 கோடி பங்குகளில் 1. 60 லட்சம் பங்குகள் ரயில்வே பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுவதாக கூறிய ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளை வாங்கும் சில்லரை முதலீட்டா ளர்கள் மற்றும் சம்பளப் பணியாளர்களுக்கு பங்கின் விலையில் 10 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்றும் கூறியது. தற்போது 81% பங்குகளை 1.63 கோடி பங்குகள் விற்பனையாகி உள்ளது. அடுத்த கட்டமாக அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் பங்குகள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஒரு பங்கு ரூ.315-க்கு விற்றால் ரூ.635.40 கோடியும், ரூ.320-க்கு விற்றால் ரூ.645.12 கோடியும் நிதி திரட்ட முடியும் என ரயில்வே நிர்வாகம் கணித்துள்ளது. இந்த வருவாய் மூலம் ரயில்வே விரிவாக்கத் திட்டங் களை மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளது.