லாட்ஜில் தன்னுடன் தங்கிய பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன்!

  0
  3
   மோகனா- ரூகேஷ்

  திருமணத்தை மீறிய ஒரு உறவால், ரயில்வே ஊழிய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  திருவள்ளூர் : திருமணத்தை மீறிய ஒரு உறவால், ரயில்வே ஊழிய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் மோகனா. இவரது கணவர் ரூகேஷ். கணவன் மனைவி இருவரும்  தண்டையார்பேட்டை ரயில்வே பணிமனையில் பணியாற்றிவருகின்றனர்.   ஒரே இடத்தில் வேலை செய்ததால், ஒருவர் வீட்டிலிருந்தால், மற்றொருவர் பணியில் இருக்கும் சூழல் இருந்துள்ளது.

  இதனிடையே ரயில்வே கேண்டீனில் டீ  விற்கும் வீராசாமி என்பவருடன் மோகனாவுக்கு  கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது ரூகேஷுக்கு தெரியவர அவர் மோகனாவை கண்டித்துள்ளார். ஆனால், அதை கண்டுகொள்ளாத மோகனா, வீராசாமியுடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பிலிருந்து வந்துள்ளார். 

  mogana

  இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வீராசாமியோடு மோகனா தங்கியுள்ளார் மோகனா.  இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீஸை  வரவழைத்து கதவை உடைத்துள்ளனர்.  அப்போது மோகனா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.  வீராசாமி தலைமறைவாகியுள்ளார். பின்னர் மோகனாவின்  உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு  போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  veerasamy

  இதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், மோகனா கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வீராசாமியை கைது செய்தனர். பின்னர் வீராசாமி அளித்த வாக்குமூலத்தில்,  லாட்ஜில் மோகனா கணவருடன் பேசுகிறேன் என்று வேறு யாருடனோ பேசி கொண்டிருந்தார். இதனால் கஞ்சா போதையில் இருந்த எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மோகனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். இதையடுத்து தற்கொலை போல சித்தரித்து தூக்கில் தொங்கவிட்டு பின் அங்கிருந்து தப்பி சென்றேன்’ என்று கூறியுள்ளார். 

  இதையடுத்து வீராசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை  சிறையிலடைத்தனர். கள்ளக்காதல் என்ற ஒன்று ஒரு பெண்ணின் உயிரை காவுவாங்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது