லாக் டவுனால் ஆலைகள் மூடல்….. 92,540 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி…

  0
  5
  மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை

  மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 92,540 கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 32 சதவீதம் குறைவாகும்.

  நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது மாருதி சுசுகி இந்தியா. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மற்றும் நாடு முழுவதும் அமலில் உள்ள லாக் டவுனால் கடந்த மாதத்தில் மாருதி சுசுகி நிறவனத்தின் ஆலைகள் பல நாட்கள் மூடப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் கார் தயாரிப்பு பாதித்துள்ளது.

  மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை

  கடந்த நிதியாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 92,540 கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 32 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா மொத்தம் 1.36 லட்சம் கார்களை தயாரித்து இருந்தது. 

  மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை

  டீலர்களின் சரக்குகளை சரிசெய்ய மற்றும் கையிருப்பு அதிகமாகி சுமை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் (2019 ஏப்ரல்-2020 மார்ச்) கார் தயாரிப்பை 10 முறை குறைத்தது