லல்லு முதல் ஜெயலலிதா வரை பதவி இழக்க காரணமான வழக்கறிஞர் மறைவு

  30
  லில்லி தாமஸ்

  அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி முதல் , ஜெயலலிதா,லல்லுபிரசாத் வரை பல அரசியல் வாதிகளுக்கு பதவி போகக் காரணமாக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி லில்லி தாமஸ் நேற்று டெல்லியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

  கேரள மாநிலத்தின் கோட்டயம் நகரில் பிறந்தவர்.தந்தை கே.டி.தாமசும் வழக்குரைஞர். படித்தது திருவணந்தபுரத்தில்.சட்டமேற்படிப்பு சென்னைப் பல்கலைக்கழ்கத்தில்.எல்.எல்.எம் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் இவர்தான்.1959-ல் பட்டப் படிப்பை முடித்த லில்லி ஆய்வுப் பணிகளுக்காக டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார்.

  அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி முதல் , ஜெயலலிதா,லல்லுபிரசாத் வரை பல அரசியல் வாதிகளுக்கு பதவி போகக் காரணமாக இருந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் லில்லி தாமஸ் நேற்று டெல்லியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

  கேரள மாநிலத்தின் கோட்டயம் நகரில் பிறந்தவர்.தந்தை கே.டி.தாமசும் வழக்குரைஞர். படித்தது திருவணந்தபுரத்தில்.சட்டமேற்படிப்பு சென்னைப் பல்கலைக்கழ்கத்தில்.எல்.எல்.எம் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் இவர்தான்.1959-ல் பட்டப் படிப்பை முடித்த லில்லி ஆய்வுப் பணிகளுக்காக டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார்.

  lilly

  உச்சநீதிமன்றத்தில் நுழைந்த முதல் கேரள பெண் வழக்குரைஞர் இவர்தான்.அப்போது உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 5 பெண் வழக்கறிஞர்கள்தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.லில்லியின் பொதுநல வழக்குச் சட்டப்போராட்ட வரலாறு நெடியது.ஆரம்பமே போராட்டம்தான். ‘ அட்வக்கேட் ஆன் ரெக்கார்ட்’ என்கிற பட்டியலில் இருப்பவர்கள்தான் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து உடைத்தவர் இவர்தான்.

  இவருடைய வரலாற்று சாதனைகள் என சொல்ல கூடியவை இரண்டு.அதில் முக்கியமானது 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் பிரிவு 8(4) ஐ ஒன்பதாண்டு கால நெடிய சட்டப் போராட்டம் நடத்தி நீக்கியது.அந்தச் சட்டப்பிரிவு எம்.பி.அல்லது எம்.எல்.ஏவாக இருப்பவர்களின் பதவிக்கு பாதுக்காப்பளித்தது. லில்லி அந்த சட்டப்பிரிவை போராடி நீக்கியதால் தான் பாலகிருஷ்ணா ரெட்டி போன்றோர் பதவி இழந்தார்கள்.

  lilly

  அடுத்த சாதனை திருமணமான ஒரு ஆண் மதம் மாறி மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதை தடுத்தது.இவர் தொடர்ந்த வழக்கில்தான்,
  இந்து திருமணச்சட்டப்படி திருமணம் செய்து கொண்ட ஒருவர் முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறாமல் மதம் மாறினாலும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிற தீர்பு வழங்கப்பட்டது.
  சட்டம் படித்த எல்லோரும் வழக்குரைஞர்தான்.ஆனால் லில்லிதாமஸ் போன்ற சிலர்தான் வழக்கறிஞர்களாக ஆகிறார்கள்.