லலிதா ஜுவல்லரி வழக்கில் திடீர் திருப்பம்! கொள்ளையனின் மனைவியிடம் விசாரணை!

  0
  6
  லலிதா ஜுவல்லரி

  திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஒரு மாதம் கூட முழுதாக நிறைவுறாத நிலையில் திருச்சியில் உள்ள வங்கி ஒன்றில் நேற்று கொள்ளை நடந்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்த முருகனிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர். 

  murugan

  இந்த வழக்கில் அடுத்த கட்டமாக, கொள்ளையன் முருகன் வாங்கி இருக்கும் சொத்துக்கள், வேறு எந்தெந்த இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் போன்ற தகவல்களைப் பெறுவதற்காக திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவை நேற்று விசாரணைக்காக, தனிப்படை போலீசார் திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். பிற இடங்களில் கொள்ளையடித்த நகைகளை வேறு எங்காவது பதுங்கி வைத்துள்ளானா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் மனைவியுடனான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.