“ரோஜாக்களுக்கு பதிலாக இதை கொடுங்கள்” பீகார் அரசு கொடுத்த சூப்பர் ஐடியா!

  0
  1
    காதலர் தினம்

  இதற்கு பியார் கா பவுதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் மரங்கள் மீது காதல் என்று பொருள்.

  உலகம் முழுவதும் இன்று  காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காதலர்கள்  வழக்கமாக ரோஜா பூக்களை தான் பரிமாறிக்கொள்வார்கள்.

  val

  இந்நிலையில்  இளைஞர்களை ஊக்குவிக்கவும் சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கவும் ரோஜாக்களுக்கு  பதிலாக மரக்கன்றுகளை வழங்குகள் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. இதற்கு பியார் கா பவுதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் மரங்கள் மீது காதல் என்று பொருள்.

  t

  இதுகுறித்து பீகார் மாநில அரசின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங், ‘மரக்கன்றுகளை நடும்  எண்ணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கண்டிப்பாக இளைஞர்கள் காதலர் தினத்தில் இதை செய்வார்கள். பாட்னா நகரில் இளைஞர்கள் கூடும் இடத்தில் மரக்கன்றுகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  மரக் கன்றை நட்டதும் நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்று இளைஞர்கள் நினைக்கக் கூடாது.  பொது இடங்களில் வைக்கும்  மரங்களை அரசே பாதுகாக்கும். இருப்பினும் இளைஞர்கள் அதிகம் கூடும் பூங்கா போன்ற இடங்களில் அதிக மரக்கன்றுகள் வைக்கப்படும்’ என்றார்.