ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய ரூ.1000 பணத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்குங்கள்! தமிழக அரசு!!

  0
  3
  ரேஷன்கடை

  கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் சட்டப்பேரவையில் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு இலவசமாக அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 

  TNPDS website

  இந்நிலையில் தமிழக அரசின் பொது விநியோக திட்ட இணையதளத்தில், “தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் ரூ.1,000 பணத்தை கொரனா நிவார நிதிக்கு வழங்க விருப்பம் உள்ளவர்கள் வழங்கலாம். www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று  தங்களுக்கான பணத்தை கொரனா நிவாரண நிதிக்கு வழங்குமாறு விருப்பம் தெரிவிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.