ரெண்டு மாசம் பிரேக் எடுத்தா போதும், உடனே கல்யாணம்னு கெளப்பி விட்டுடுறாங்க‌

  11
  Shruti Hassan

  கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. அதனால் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டேன்” என நிதானமாக, முக்கியமா தெளிவாக பேசுகிறார் சுருதி.

  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு ரெண்டு மூணு மாசம் பிரேக் எடுத்தா, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டதாக கிளம்பும் புரளிகளுக்கு பதில் சொல்லி சமாளிப்பதற்குள் ஹீரோயின்களுக்கு நாக்கு தள்ளிவிடும். சுருதி ஹாசனும் மேற்படி புரளிகளில் சிக்கி படாதபாடுபட்டு மீண்டு வந்திருப்பதாக சொல்கிறார். சிறிய இடைவெளிக்குப்பிறகு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துவருகிறார் சுருதி.

  Vijay Sethupathi Shurti Hassan

  “சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிடுச்சி, சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் எனக்கு திருமணம் ஆகிவிட்டது, குண்டாகிவிட்டேன் என கண்டதையும் சொல்வதை கேட்கும்போது வருத்தமாக இருந்தது, கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. அதனால் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டேன்” என நிதானமாக, முக்கியமா தெளிவாக பேசுகிறார் சுருதி.