‘ரெண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பிச்சாங்க’: கவின்லியா காதல் குறித்து உண்மையை உடைத்த சேரன்

  23
  லாஸ்லியா

  லாஸ்லியா அவங்க அப்பா பத்தி என்கிட்ட  நிறைய பேசியிருகாங்க. காலப்போக்கில் சில மாற்றங்கள் நடந்தது.

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது.  இந்த சீசனில் பாசம், காதல், சண்டை, நட்பு என பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததாலும் போட்டியாளர்கள் சாகப்போட்டியாளர்களின் வீடுகளுக்குச் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என ஜாலியாக உள்ளனர்.

  cheran

  முக்கியமாக இந்த வீட்டில் சேரன் – லாஸ்லியா இருவருக்கும் இடையே நடந்த அப்பா -மகள் உறவு பல இடங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலமுறை லாஸ்லியா சேரனை உதாசீனப்படுத்தியும் சேரன் அதை பொருட்படுத்தாமல் பதிலுக்கு  பாசத்தை மட்டுமே லாஸ்லியாவுக்கு கொடுத்தார்.

  losliya

  இந்நிலையில் சேரன் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘லாஸ்லியா அவங்க அப்பா பத்தி என்கிட்ட  நிறைய பேசியிருகாங்க. காலப்போக்கில் சில மாற்றங்கள் நடந்தது. கவின் மீது அவங்களுக்கு ஈர்ப்பு  வந்தது. இருவரும் பேச ஆரம்பிச்சாங்க. நெருக்கமாக உட்கார்ந்து பழக ஆரம்பிச்சாங்க.

  losliya

  எதிர்காலம் பத்தியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சாங்க. இது அவங்க பெற்றோர்களை எப்படி பாதிக்கும் என ஒரு அப்பாவா ஃபீல் பன்றேன். அந்த பயம் எனக்குள் இருந்திச்சி. கவின் குடும்பத்தை நினைத்தும் பயந்தேன்.

  losliya

  ஆனால்  கவின் என்ன தப்பா புரிஞ்சிகிட்டாரு. நான் ஏதோ டிராமா பண்ணுறேன்னு நினைச்சிக்கிட்டாரு. ஏற்கனவே நான் பேர் வாங்கிட்டேன். இதை செஞ்சி தான் பேர் வாங்கணும்னு அவசியமில்லை’ என்றார்.