ரெட்மி 7 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்: விலை விபரம் உள்ளே!

  0
  6
  redmi

  சியோமி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  பெய்ஜிங்: சியோமி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  சியோமி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த MIUI 10 இயங்குதளம் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும் இந்த சாதனத்தின் முன்பக்கம் மற்றும் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ப்ரூஃப் வசதியும் செய்யப்பட்டுள்ளது. புளு, ரெட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று விதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 699 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7,150) என்றும், 3 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.8,170) என்றும், 4 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,215) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  சியோமி ரெட்மி 7 சிறப்பம்சங்களாக 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி மூன்று ரேம் வகைகள், 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி ஆகிய மெமரி வகைகள், டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.