ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.. அதிரடி விலை குறைப்பு!

  0
  10
  redmi

  ரெட்மி தலைப்பில் வெளிவந்த கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு வர இருக்கிறது.

  இந்திய தொழில்நுட்பச் சந்தையில் ரெட்மி ஸ்மார்ட் போன்களின் விற்பனை தற்போது முதலிடத்தில் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. துவக்கத்தில் பத்தாயிரம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பிறகு 20 ஆயிரம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அதிலும் ரெட்மி நிறுவனம் வெற்றி கண்டது. 

  K20

  கடந்த ஆண்டு போகோ எனும் மாடல் மூலம் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் ரெட்மி நிறுவனம் களமிறங்கியது. 

  அதைத்தொடர்ந்து கடந்த மாதம் ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அதிலும் நல்ல விற்பனையை கண்டுகொண்டிருக்கிறது.

  ரெட்மி கே20 ப்ரோ – 

  6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999, 

  8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 ஆக இருக்கிறது.

  இந்நிலையில் பிளிப்கார்ட் இயங்குதளத்தில் இம்மாத இறுதியில் வரவிருக்கும் பிக் பில்லியன் டே-வில் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடலின் விலை 3000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ. 24,999 க்கு விற்கப்பட இருக்கிறது. 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடலின் விலை ரூ. 27,999 ஆக  குறைக்கப்பட்டுள்ளது.

  மேலும், ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

  இவை இரண்டிற்கும் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் கொண்டு பணம் செலுத்தினால், கூடுதலாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் உண்டு.

  ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கேமிங் ஆடுவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது