ரூ. 700 கோடியா… லண்டன் நிபந்தனையை நிராகரித்த ஷெரீப்!

  0
  8
  Nawaz Sharif

  சிகிச்சைக்காக லண்டன் செல்ல அரசு விதித்த நிபந்தனைகளை ஏற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார்.
  பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் இவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து பதவியிலிருந்து இறங்கிய ஷெரீப், சிறையிலும் அடைக்கப்பட்டார்.

  சிகிச்சைக்காக லண்டன் செல்ல அரசு விதித்த நிபந்தனைகளை ஏற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார்.
  பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா பேப்பர்ஸ் முறைகேடு வழக்கில் இவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து பதவியிலிருந்து இறங்கிய ஷெரீப், சிறையிலும் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக எட்டு வார பெயிலி; தற்போது லாகூரில் உள்ள வீட்டில் ஷெரீப் உள்ளார்.

  nawas

  உயர் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கடந்த வாரம் அவர் லண்டன் அழைத்து செல்லப்படுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. இதற்கு வசதியாக அவருக்கு இருந்த தடையையும் பாகிஸ்தான் அரசும் நீக்கியது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் அரசு விதித்த நிபந்தனைகள் ஷெரீப்புக்கு நெஞ்சடைப்பையே வரவழைத்திருக்கும் போல… லண்டன் திட்டத்தையே ஷெரீப் கைவிட்டுவிட்டார். லண்டன் சிகிச்சை முடிந்த உடனே பாகிஸ்தான் திரும்ப வேண்டும். இதற்கு பிணையாக ரூ.700 கோடி சொத்துக்களை அரசிடம் அளிக்க வேண்டும் என்ற அரசின் நிபந்தனைதான் அதற்கு காரணம். 
  இது குறித்து அவருடைய கட்சியை சார்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையை காரணம் காட்டி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு எட்டுவாரம் பெயில் வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அரசோ சட்ட விரோதமாக நிபந்தனை விதித்துள்ளது. அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு இம்ரான் கானும் அவருடைய அரசும்தான் பொறுப்பு” என்றார்.