ரூ.56 ஆயிரம் கோடி முதலீட்டாளர்களுக்கு லாபம்…. சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்தது….

    0
    1
    பங்கு வர்த்தகம்

    இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்தது.

    ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு யெஸ் வங்கியின் கணிசமான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் பங்கு வர்த்தகம் முடிந்தது.

    கோடக் மகிந்திரா வங்கி

    சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக்மகிந்திரா வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக்மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

    மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,194 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,216 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.59 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.56 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

    மும்பை பங்குச் சந்தை

    இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 61.13 புள்ளிகள் உயர்ந்து 38,470.61 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 18.00 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,269.00 புள்ளிகளில் முடிவுற்றது.