ரூ.40க்கு விற்க வேண்டிய பெட்ரோல்… விலை உயர்வு மோடி அரசின் முட்டாள்தனம்! – சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

  0
  2
  Subramanian Swamy

  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. விலை உயர்ந்தால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், குறையத் தொடங்கியபோது விலைக் குறைக்காமல் வரியை மட்டும் உயர்த்திக் கொள்கின்றன.

  பெட்ரோல் மீதான வரி உயர்வு என்பது மோடி அரசின் முட்டாள்தனம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

  modi

  விலை உயர்ந்தால் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், குறையத் தொடங்கியபோது விலைக் குறைக்காமல் வரியை மட்டும் உயர்த்திக் கொள்கின்றன. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் மோடி அரசு அதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது மிகவும் அவமரியாதை செய்யும் வகையில் அசட்டுச் சிரிப்பை உதிர்த்து கூட்டத்தை முடித்து வெளியேறினார் நிதி அமைச்சர். 

   

  இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியை டேக் செய்து ட்விட்டரில் ஒருவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, “குடியரசுத் தலைவர் நியமித்த எம்.பி-யான எனக்கு பதில் சொல்வதைவிட மக்களுக்கு பதில் அளிக்கக் கடமைப்பட்டவர் நிதி அமைச்சர். பொருளாதார நிபுணராக இந்த விலை உயர்வு என்பது முட்டாள்தனம் என்று கூறுவேன். பொருளாதார நீதி மற்றும் வளர்ச்சியை கண்ணோக்கிப் பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40ஐத் தாண்டக் கூடாது” என்றார்.