ரூ.388-க்கு ஒரே ஒரு நெயில் பாலிஷ் தான் ஆர்டர் செய்தேன்! ஒரு லட்சம் அபேஸ்! கதறும் இளம்பெண்

  10
  நெயில் பாலிஷ்

  மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம்  17ஆம் தேதி ஆன்லைனில் நெயில் பாலிஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளனர். அதன் விலை ரூ.388. அதனை ஆன்லைன் மூலம் அந்த வங்கிக் கணக்கு ஒன்றிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். நெயில் பாலிஷ் டெலிவரி ஆகும் தேதி என்று ஆர்டர் செய்யும் போது குறிப்பிட்டிருந்த தேதியில் நெயில் பாலிஷ் டெலிவரி ஆகவில்லை.

  இதையடுத்து அந்த பெண் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆர்டர் செய்த பொருளுக்கான பணம் இன்னும் எங்களுக்கு வரவில்லை என அதன் காரணமாகவே நெயில் பாலிஷ் டெலிவரி செய்யப்படவில்லை என அந்த சேவை மையத்தின் அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பணம் வந்ததா என்பதை செக் செய்ய வேண்டும் எனக்கூறி அந்த பெண்ணின் வங்கிக்கணக்கு எண் மற்றும் தொலைப்பேசி எண்ணையும் வாங்கியுள்ளார்.

  nail polish

  சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் கணக்கிலிருந்து ரூ. 90946 எடுக்கபட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தார் அந்த பெண். உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.