ரூ.2,238 கோடிக்கு விலை போகும் மும்பை பிளாட்! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜப்பான் நிறுவனம்!

  0
  1
  3 ஏக்கர் பிளாட்

  மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் 3 ஏக்கர் பிளாட்டை ஜப்பான் நிறுவனம்  ரூ.2,238 கோடிக்கு ஏலம் கேட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

  மும்பை : மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் 3 ஏக்கர் பிளாட்டை ஜப்பான் நிறுவனம்  ரூ.2,238 கோடிக்கு ஏலம் கேட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏக்கர் அடிப்படையில் பார்த்தால், இந்த ஏலத்தின் மதிப்பு நம் நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஏல நடவடிக்கையாகும். 

  நம் நாட்டு இருக்கிற டாட்டா நிறுவனம் போல் ஜப்பானில் பாரம்பரிய மிக்க நிறுவன குழுமம் சுமிடோமோ. இந்த குழுமம் ரியல் எஸ்டேட், நிதி சேவை என பல்வேறு துறைகளில் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தி வருகிறது. சுமிடோமோ குழுமத்துக்கு சொந்தமாக மஸ்டா மோட்டார்ஸ் என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும் உள்ளது.

   

  சுமிடோமோ குழுமம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் 3 ஏக்கர் பிளாட்டை ஏலத்தில் கேட்டுள்ளது. ஏலத்தில் இடத்தை வாங்குவது சகஜம்தான். ஆனால் சுமிடோமோ குழுமம் இடத்துக்கு கொடுப்பதாக சொன்ன தொகைதான் எல்லோரையும் திகைப்படைய செய்தது.

  அந்த 3 ஏக்கர் பிளாட்டை ரூ.2,238 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளது. சராசரியாக ஒரு ஏக்கர் ரூ.745 கோடி மதிப்புக்கு ஏலம் கேட்டது. ஏக்கர் அடிப்படையில் பார்த்தால் நம் நாட்டில், இந்த ஏலத்தின் மதிப்பு நம் நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஏல நடவடிக்கையாகும். இதற்கு முன் 2010ல் லோதா குழுமம் வாதாலாவில் 6.2 ஏக்கர் பிளாட்டை ரூ.4,050 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.653 கோடி கொடுத்தது.

  சுமிடோவின் இந்த நடவடிக்கையால் சுணங்கி கிடந்த மும்பை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.