ரூ 2.5 கோடி மோசடி செய்ததாக போனி கபூர் மீது பரபரப்பு  புகார்? 

  0
  1
  போனி கபூர்

  அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் ஆவர்.

  அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் ஆவர். அந்த படத்தின் பாதி வேலைகள் முடிந்து தற்போது வியாபாரம் பேசிக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 

  அது என்னவென்றால், பிரவீன் ஷியாம் சேத்தி என்பவர் போனி கபூர், முஸ்தாபா, பவான் ஜாங்கிட் ஆகிய மூவர் மீதும் 2.5கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.

  அதில், ‘நான் அவர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் தான் நம்பி பணத்தை கொடுத்தான். ஹோட்டல் ஒன்றில் அவர்களைச் சந்தித்து இந்தப் பணத்தைக் கொடுத்தேன். போனி கபூர்தான், இந்த முதலீடு இரட்டிப்பாக வரும் என்று கூறினார் அதனால் தான் கொடுத்தேன் மூவரும் சேர்ந்து செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டி நடந்த போவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பித் தர மறுக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார். 

  boney

  அதைத் தொடர்ந்து 420, 406, 120-பி ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.