ரூ.2.18 லட்சம் கோடி மாயம்…..மீண்டும் முதலீட்டாளர்களின் பணத்தை பறித்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 811 புள்ளிகள் வீழ்ச்சி….

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 811 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

  இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து ஏற்றத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு மேலும் ஒருவர் பலியானது மற்றும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் மிகப்பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இது போன்ற பல காரணங்களால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

  சுகாதார பணியாளர்கள்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோமோட்டோகார்ப், பவர்கிரிட் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 779 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,650 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.119.57 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.18 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

  இண்டஸ் இந்த் வங்கி

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 810.98 புள்ளிகள் சரிந்து 30,579.09 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 230.35 புள்ளிகள் வீழ்ந்து 8,967.05 புள்ளிகளில் முடிவுற்றது.