ரூ.1,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி

  0
  2
  மாருதி சுசுகி

  நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா தனது குறிப்பிட்ட கார்களின் விலை உயர்த்தியுள்ளது.

  மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது குறிப்பிட்ட மாடல் கார்களின் விலையை ரூ.1,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது. மூலதன செலவினம் அதிகரித்துள்ளதால் வேறு வழியின்றி கார்களின் விலையை உயர்த்தியுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் கார்களின் விலையை மட்டுமே மாருதி சுசுகி உயர்த்தியுள்ளது.

  அல்ட்டோ

  கார் மாடல்                       விலை உயர்வு
  அல்டோ மினி                  ரூ.6,100 முதல் ரூ.9,300 வரை
  எஸ்-பிரெஸ்ஸோ            ரூ.1,500 முதல் ரூ.8,000 வரை
  வேகன் ஆர்                         ரூ.1,500 முதல் ரூ.4,000 வரை

  எர்டிகா எம்.பி.வி.                ரூ.4,300 முதல் ரூ.10,000 வரை
  பலேனோ                             ரூ.3,200 முதல் ரூ.8,000 வரை
  ஸ்விப்ட்                               ரூ.5,000
  எக்ஸ்.எல்.6 எம்.பி.வி.         ரூ.5,000

  எர்டிகா

  அதேசமயம், டிசையர், எக்கோ, செலிரியோ, சியாஸ் ஆகிய கார் மாடல்களின் விலையில் எந்த வித மாற்றத்தையும்  மாருதி சுசுகி செய்யவில்லை.