ரூ.150க்கு 18 காய்கறிகள் கொண்ட தொகுப்பு பை வழங்கும் தேனி உழவர் சந்தை!

  0
  1
  காய்கறி

  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரலாம் என்றும் சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. குறிப்பாக, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்களுக்காக மக்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளனர். 

  ttn

  இந்நிலையில், தேனி உழவர் சந்தையில் காய்கறி தொகுப்பு பை வழங்கப்பட்டு வருகிறது.  மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவும், குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 18 காய்கறிகள் அடங்கிய அந்த தொகுப்பு பை ரூ.150க்கு வழங்கபடுகிறது. அதில், தக்காளி, பச்சைமிளகாய், கத்திரிக்காய், சௌ சௌ, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகள் வைக்கப்பட்டுள்ளன.