ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்றோம்… 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் சாத்தியம்தான்… பிரதமர் மோடி நம்பிக்கை

  0
  1
  அடிப்படை கட்டமைப்பு

  அடிப்படை கட்டமைப்புகளில் ரூ.100 கோடி முதலீடு செய்ய உள்ளோம் அதனால் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவது சாத்தியம்தான் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை அளித்தார்.

  நாடு முழுவதும் இன்று 73வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடினம் என பலரும் சிந்திக்கின்றனர்

  பிரதமர் மோடி
  ஆனால் இது போன்ற கடினமான சிந்திக்கவில்லை என்றால் எப்படி நாம் வளர்ச்சி காணுவது. 2 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட 70 ஆண்டுகள் ஆனது. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் கூடுதலாக 1 லட்சம் கோடி டாலரை சேர்த்துள்ளோம். மற்றும் இது கொடுத்த நம்பிக்கையால் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை நோக்கி செல்ல முடியும்.

  அடிப்படை கட்டமைப்பு பணிகள்

  சாலை, தண்ணீர், கல்வி  மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை வசதிகளை உலக தரத்துக்கு உருவாக்க ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது,  5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட உதவும் என கூறினார்.