ரூ.1.25 கோடி நிவாரணமாக வழங்கிய அஜித்திற்கு மிக்க நன்றி – அமைச்சர் கடம்பூர் ராஜூ

    0
    10
    வலிமை

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித்  10 லட்சம் ரூபாய் உதவி தொகையை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் பிரதமர் நிவாரணத்தொகைக்கு ரூ. 50லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ,50 லட்சமும் வழங்கினார்.

     

     

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ,”சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்ற அன்புச் சகோதரர் திரு.அஜித் அவர்கள் #Coronavirus தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி வழங்கியிருக்கின்றார்.

    அவருக்கு செய்தி மற்றும் விளம்பர துறையின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.