ருத்ரதாண்டவம் ஆடிய லெக்கிமா புயல்: இதுவரை 44 பேர் பலி!

  0
  3
  லெக்கிமா

  சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.  நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு வீழ்ந்தன.

  சீனா: சீனாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட லெக்கிமா புயலுக்கு  44 பேர் பலியாகியுள்ளனர். 

  cyclone

  சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயல் தாக்கியது. லெக்கிமா புயல் மணிக்கு  187 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் அப்பகுதியிலிருந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. 

  cyclone

  நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு வீழ்ந்தன.  இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் போக்குவரத்து சேவை முடங்கி போனது. 

  cyclone

  இதே போல்  ரயில் மற்றும் விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ருத்ரதாண்டவம் ஆடிய  லெக்கிமா புயலால்  இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

  மேலும்  20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் சீன அரசு கூறியுள்ளது. இதனால் ஜேஜியாங் மாகாண மக்கள் தங்கள் இயல்பு வாழ்கையை  இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.