ரிலையன்ஸ் ஜியோ ரூ.4,999 நீண்டகால ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான் மீண்டும் அறிமுகம்

  0
  4
  jio

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.4,999 நீண்டகால ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

  டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.4,999 நீண்டகால ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.4,999 நீண்டகால ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த பிளானை ஜியோ நிறுவனம் நிறுத்தியது. ரூ.4,999 ப்ரீபெய்டு பிளானில் 360 நாட்கள் வேலிடிட்டியுடன் 350 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன் எந்த இரு ஜியோ எண்களுக்கும் இடையே அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகிய பலன்கள் வழங்கப்படுகிறது.

  ttn

  மற்ற நெட்வொர்க் எண்களுக்கு வாய்ஸ்கால் பேச 12,000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ஜியோ இணையதளத்தில் நீண்டகால ரீசார்ஜ் திட்டங்கள் என்ற பகுதியில் இந்த ரூ.4,999 ப்ரீபெய்டு பிளானை கண்டறிந்து ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும் ஜியோ ஆப்களின் இலவச சந்தாவும் இந்த பிளானை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.