ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம்! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்

  0
  8
  சிவகார்த்திகேயன்- நயன்தாரா

  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது.

  சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது.

  ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிடுவதற்குள் படகுழுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டத்திற்குப் பயனில்லாமல், முதல் காட்சி முடிந்த பிறகே அந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி தயாரிப்பாளரின் தலையில் இடியை இறக்கும். இந்த இணையதளத்தை முடக்க பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்துமே தோல்வியில் தான் முடிகிறது. 

  அந்த வகையில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ஏற்கனவே படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, என்று ரசிகர்கள் கூறி வந்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  local

  இந்தச் சூழலில் படம் ரிலீஸான தினமே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்டிருக்கிறது.ஆதலால் பெரும் தொகை கொடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தின் வினியோக உரிமையை பெற்றவர்கள் இதனால் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உள்ளது.  மேலும் இதே நாளில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.