ரிசார்ட் ஓனருடன் கள்ள உறவு: பக்கா பிளான் போட்டு கணவனை கொன்று புதைத்த மனைவி!

  0
  3
  லிஜி

  ரிசார்ட்டின் உரிமையாளர் வாசிம் அப்துல் காதரும் தலைமறைவாகியுள்ளார். இதனால்  போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த, ரிசார்டின்  பின்புறம் புதிதாக மணல் குவியல் இருந்துள்ளது.

  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறையை சேர்ந்தவர்  ரிஜோஷ். இவருக்கு லிஜி  என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர்.  ரிஜோஷ் ரிசார்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்ததால் அதன் அருகிலேயே வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். 

  kerala

  இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு  ரிஜோஷை காணவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் சாந்தம்பாறை காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளனர். அப்போது மனைவி  பயப்பட வேண்டாம், அவர் என்னுடன் செல்போனில் பேசினார் என்று கூறி கால் லிஸ்டை காண்பித்துள்ளார். இருப்பினும் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ரிஜோஷ் உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க போலீசாருக்கு மனைவி லிஜி  மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  murder

  இதையடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு லிஜி  தனது குழந்தையுடன் காணாமல் போயுள்ளார். மேலும் ரிசார்ட்டின் உரிமையாளர் வாசிம் அப்துல் காதரும் தலைமறைவாகியுள்ளார். இதனால்  போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த, ரிசார்டின்  பின்புறம் புதிதாக மணல் குவியல் இருந்துள்ளது. அதை தோண்டி பார்த்தபோது சாக்கு மூட்டையில் சடலமாக ரிஜோஷ் கிடந்துள்ளார். இதிலிருந்து,  வாசிம் அப்துல் காதருக்கும் லிஜிக்கும்  கள்ளக்காதல் இருந்ததால், இடையூறாக இருந்த ரிஜோஷை மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது   அம்பலமானது.

  இதை தொடர்ந்து  வாசிம் அப்துல் காதரின் சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் ரிஜோஷ் கொலை வழக்கில் நான் தான் குற்றவாளி. இதில் என் குடும்பத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை’ என்று கூறியுள்ளார். 

  kerala

  லிஜி -ரிஜோஷ் செல்போன் எண்களை  வைத்து, அவர்களின் இருவரும்  குமுளியில் இருப்பது தெரியவந்தது. ஒருவேளை அவர்கள் தப்பிவிட கூடாது என்று  தமிழக போலீசாருக்கும் இருவரின் புகைப்படமும் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.