‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது!

  0
  3
  கோப்புப்படம்

  வேவு பார்ப்பதற்கு ஊதியமாக தங்களுக்கு 8,100 டாலர்கள் வழங்கப்பட்டதாக மன்மோகன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பெர்லின்: இந்திய உளவு அமைப்பான ‘ரா’-வுக்கு வேவு பார்த்ததாக இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  ஜெர்மனியில் உள்ள சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீர் இயக்கம் குறித்து வேவு பார்த்ததாக இந்திய தம்பதி மன்மோகன் (50) மற்றும் அவரது மனைவி கன்வால் ஜித் (51) ஆகியோரை ஜெர்மன் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீர் இயக்கம் குறித்த தகவலை இந்திய உளவு அமைப்பான ‘ரா’-வில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் அளித்ததாக மன்மோகன் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  intelligence

  மேலும், கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற ‘ரா’ அதிகரியுடனான் மாதாந்திர கூட்டத்தில், தன்னை, தன்னுடைய மனைவி சேர்த்து விட்டதாகவும், வேவு பார்ப்பதற்கு ஊதியமாக தங்களுக்கு 8,100 டாலர்கள் வழங்கப்பட்டதாகவும் மன்மோகன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது.

  இதையும் வாசிங்க

  ரஃபேல் விவகாரம்: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்